மார்கழி மகா உற்சவம்


மார்கழி மகா உற்சவம்(2018) – நங்கநல்லூர் ரஞ்சனி சபாவில் திருவையாறு என்று கூறுவதற்குத் தகுந்தபடி 150 இளம் இசைக் கலைஞர்களின் இசைச் சங்கமம் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தது. 



நங்கநல்லூரில் 2008 தொடங்கி, சாய் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற இசைப் பள்ளியை நடத்திவரும் நெல்லை மு.விநாயக மூர்த்தியின் சீடர்கள்தாம் இந்நிகழ்ச்சியை படைத்தளித்தனர். வீணை, சித்தார், கீபோர்டு, வயலின் முதலிய இசைக்கருவிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரு பாடலை இசைத்தது செவிக்கு விருந்தளித்தது. கண்ணுக்கும், கருத்துக்கும்தான்.
தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள், தயானந்த சரஸ்வதி அவர்களின் கீர்த்தனை, திருப்புகழ், விநாயகர் பாடல், கிருஷ்ணன் பாடல் என்று செவியில் தேன் வந்து பாய்ந்தது. 






இசைக் குடும்பத்தின் வழி வழியே வந்திருக்கும் திரு விநாயகமூர்த்தியின் தந்தை வி.முருகேசன் அவர்கள் ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல, நாடகக் கலைஞரும் கூட. தாய் வாய்ப்பாட்டு, வீணை இசைக் கலைஞர். நெல்லை விநாயகமூர்த்தி அவர்கள் சமீபத்தில் புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய “இசைக் கடல்” என்ற விருதை நானும் திருமதி வரலட்சுமி  (vocalist –all india radio “a” Grage Artist) அவர்களும் வழங்கி மேலும் சிறப்பித்தோம்.






இவருடைய மனைவி இசை ஆசிரியர், இவருடைய இரு மகள்களும் அற்புதமான இசைக்கலைஞர்கள் (வாய்ப்பாடு, வயலின்). இவர்களுக்கு அந்நிகழ்சியில் மன்னை பாசந்தி அவர்கள் நடத்தும் அறக்கட்டளையின் சார்பில் இவ்விரு சகோதரிகளுக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இசைக் கலைஞர்கள் அக்கரை சகோதரிகளின் உறவுக்காரர் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. sai fine arts  என You tube - தட்டச்சு செய்து 150 இளம் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியைக் கேட்டு, கண்டு ரசிக்கலாம். இசைக்கு மயங்காத உயிர்கள் உண்டா.... இசையால் வசமாகா இதயம் எது? 


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!