சுதா வந்தாச்சா?



சுதா வந்தாச்சா?


by -இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி - சிறுவர் மணி 6.8.2018



"சுதா வந்தாச்சா?''  டியூஷன் மிஸ் வித்யா வகுப்புக்கு வந்த மாணவிகளிடம் கேட்டார்.

÷ஒருத்தி எழுந்து நின்று,  ""டீச்சர் அவள் வரமாட்டாள். நான் அடிக்கடி சுதாவை எங்கத் தெருவுல,  பக்கத்துத் தெருவுல பார்க்கிறேன். எப்பப் பார்த்தாலும் அவள் சைக்கிள்ல அங்கேயும் இங்கேயும்தான் சுத்திகிட்டிருக்கா? அவள் எப்போதும் போல லேட்டாதான் மிஸ் வருவா...  எங்களுக்கு நீங்க பாடம் நடத்துங்க'' என்றாள் சுதாவின் மீது பொறாமை கொண்ட பூமா.

÷பூமாவும் சுதாவும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். பூமாவுக்கு சுதாவைப் பிடிக்காது. காரணம், சுதா மிகுந்த புத்திசாலி.  படிப்பில் படுசுட்டி, நல்ல நினைவாற்றல் கொண்டவள். ஆசிரியர் எந்தக் கேள்வி கேட்டாலும் "டக்டக்' என்று கூறிவிடுவாள். எல்லோரிடமும் மரியாதையோடு பழகுவாள். ஆனால், சுதாவிற்கு எதிர்மாறானவள் பூமா.

÷பூமா கூறியதைக் கேட்ட டீச்சர், ""வழக்கம் போல அவள் லேட்டுதான் போலிருக்கு. சரி, பூமா, நீ யாரைப் பற்றியும் இப்படித் தவறாகப் பேசக்கூடாது. அதுவும் அவர் இல்லாதபோது!... அது அநாகரிகம். அவள் வரட்டும்... நான் விசாரித்துக் கொள்கிறேன் '' என்றார் கோபமாக.

÷வித்யா மிஸ்ஸýக்கு சுதாவை மிகவும் பிடிக்கும். அவள் நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவள், நன்றாகப் படிப்பவள், பொறுப்பானவள், குறிப்பாகத் தாய் இல்லாத பெண் என்பதால் .....
.....

""சுதா வந்தாச்சா?'' மீனாட்சி பாட்டி ஆர்வத்துடன் தன் அலுவலக அறையில் தன் முன்னே உட்கார்ந்திருந்த கோகிலாவிடம் கேட்டாள்.
÷""இல்ல  பாட்டி,  இன்னிக்கு  என்னவோ ரொம்ப  லேட்டாகுது''
÷""சரி, வந்தா என் அறைக்கு அனுப்பு''  பாட்டி உள்ளே சென்றுவிட்டார்.

÷அரைமணி கழித்து பூப்போட்ட புது சூடிதார் அணிந்தபடி அந்த "சாரதா மகளிர் விடுதி'க்குள்நுழைந்தாள்சுதா.

÷""ஏன் இன்னிக்கு இவ்வளவு லேட்? பாட்டி கேட்டாங்க'' என்றாள் கோகிலா.
÷""அதுவா... வசூல் பண்ணப் போயிருந்தேன். அதான் லேட் ஆன்டி...'' என்றாள்.
÷""சரி,  உடனே பாட்டியைப் போய் பாரு'' என்றாள் கோகிலா. 

÷பாட்டி அறைக்குப் போன சுதா, ""சாரி,  பாட்டி, இன்னிக்கு வசூலுக்குப் போயிருந்தேன். உங்களுக்குத் தேவையானது இதோ இருக்கே... என்று ஒரு பையை எடுத்து நீட்டினாள்.

÷பையை வாங்கிக் கொண்ட பாட்டி, ""சரி,  உன்அக்காதான் உன்னைத் தேடிக்கிட்டிருந்தா... அவளைப் போய் பாரு'' என்றார்.
÷""சரிபாட்டி'' என்று கூறிவிட்டு அக்காவின் அறையை நோக்கி நடந்தாள் சுதா.

÷சுதாவின் அக்காவான கலா வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கும் அந்த சாரதா விடுதியில்தான் தங்கி இருக்கிறாள். கிராமத்தில் சுதாவின் வீட்டுக்கு  அடுத்த வீட்டில் குடியிருந்த கலாவை, சுதா  "அக்காஅக்கா' என்றுதான்அழைப்பாள். அவள் உடன் பிறந்தவள் அல்ல. கலா அக்கா படிப்பு முடித்து வேலை கிடைத்ததும் இந்தப் பெண்கள் விடுதியில் வந்து தங்கி, வேலைக்குச் சென்று வருகிறாள். அவளைப் பார்க்கத்தான் சுதா அடிக்கடி இந்த விடுதிக்கு வருவாள். இப்படித்தான் சுதாவைப் பற்றி பலரும் தெரிந்து வைத்திருந்தனர்.





.....

÷அந்த சாரதா விடுதிக்கு சற்றுத் தொலைவில் இருந்த அந்த மருந்துக்கடையில் நின்று கொண்டிருந்த சுதாவைப் பார்த்த டியூஷன் மிஸ் வித்யா,  ""நீ அடிக்கடி ஒரு பெண்கள் விடுதிக்குப் போகிறாயாமே.... போன வாரம்கூட  நான் வேறொருத்தர் வீட்டு வாசலில் உன்னைப் பார்த்தேன். கூப்பிடுவதற்குள் சைக்கிளில் ஏறிப் போய்விட்டாய். நேரம் கிடைக்கும் போது வீட்டில் உட்கார்ந்து படிக்காமல் இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாயே... நேற்று டியூஷனுக்குக்கூட வரலையே? உனக்குப் பெண்கள் விடுதியில் அப்படி என்ன வேலை?''
÷""டீச்சர் அது வந்து....'' என்று தயங்கினாள் சுதா.

÷""உன்னைப் பற்றி மாணவிகள் சொன்னபோது நான்கூட  நம்பவில்லை. ஆனால், இன்று என் கண்ணாலேயே பார்த்துட்டேன்.  நல்லாப் படிக்கிற பொண்ணு நீ, இப்படி ஆம்பளப் பசங்களாட்ட ம் ஏன் அங்கயும் இங்கயும் சுத்திகிட்டிருக்கே... அப்பாவுக்குத் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவார்?'' சற்றுக் கடிந்து கொள்வது போலக் கேட்டார்.

÷""மிஸ்....'' என்றுஆரம்பிப்பதற்குள், வித்யா மிஸ்úôடு வேலை பார்க்கும் ஆசிரியை ஜாக்குலின் மேரிஅங்கு எதிர்ப்பட்டார்.

÷""வித்யா மேடம்,  என்ன இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க? நான் பக்கத்துல இருக்கிற ஒரு விடுதியில்தான் தங்கியிருக்கேன். கொஞ்ச தூரம்தான்.... வாங்க பேசிகிட்டே போகலாம்'' என்று கூறியதோடு அவரை தன்னுடன்அழைத்துச் சென்றுவிட்டார்.
÷வித்யா மிஸ், சுதாவை முறைத்துப் பார்த்துவிட்டு,  ஜாக்குலின் டீச்சரோடு அங்கிருந்து சென்று விட்டார்.

÷தன்னுடைய விடுதி அறைக்கு வித்யா மிஸ்சை அழைத்துச் சென்ற ஜாக்குலின் டீச்சர்அவரோடு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென்று, ""ஆமாம் டீச்சர், உங்களுக்கு எப்படி சுதாவைத் தெரியும்?  நீங்க ரெண்டுபேரும் பேசிக் கிட்டிருந்தீங்களே.... உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா?''

÷""ஆமாம்,  அவள் என்னிடம்தான் டியூஷன் படிக்கிறாள். புத்திசாலிப் பெண். ஏன் அவளைப் பற்றிக் கேட்கறீங்க?''

÷""அட,  சுதா இந்த விடுதிக்கு அடிக்கடி வருவாளே.  அவளோடு  ஊர்க்காரப் பெண் ஒருத்தி இங்கதான் தங்கியிருக்காளாம். பேங்குல வேலை பார்க்கறாங்க.  இந்த விடுதி கணக்கு வழக்கெல்லாம் அவங்கதான் பார்த்துக்கறாங்க. அவங்களைப் பார்க்க சுதா அடிக்கடி வருவா... கூடவே எங்களுக்கும் ரொம்ப உதவியா இருப்பா...குறிப்பா பாட்டிக்கு.  விடுதி நடத்துற பாட்டிக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். தினமும் பள்ளியில் என்ன நடந்தது? செய்தித் தாள்களில் வந்த முக்கிய செய்திகள் என்னென்ன என்பதை யெல்லாம் கூறுவாள். இந்தச் சின்ன வயசுல இவ்வளவு புத்திசாலியா, பொறுப்பா இருக்காளேன்னு நான்கூட ஆச்சரியப்பட்டிருக்கேன்''

÷""... என் ஸ்டூடன்டாச்சே... பின்ன எப்படிஇருப்பா?''
என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் வித்யா மிஸ். அவள் மனம் சுதாவைப் பற்றி எதையோ அசை போட்டபடி இருந்தது.
......

÷மறுநாள்.... டியுஷன் வந்த சுதாதைப் பார்த்து, ""சொல்லுங்க மேடம், உங்களுக்கு அந்த விடுதியில அப்படி என்ன  வேலை? நேற்றுகூட  பார்த்தேனே...'' என்று ஒன்றும் தெரியாதவள் போல கேட்டாள் வித்யா மிஸ்.

÷""சாரி மிஸ். உண்மையைச் சொல்லிடறேன். என்னைப் படிக்க வைக்க அப்பா ரொம்ப கஷ்டப்படுறார். அவருக்கு உதவியா இருக்கணும், என் செலவை நானே பார்த்துக்கணும்னு நினைத்தேன். அதனால, காலையில நாலுமணிக்கு எழுந்து  சில வீடுகளுக்கு சைக்கிளில் போய் பால் பாக்கெட், பத்திரிகைகளைப் போடுகிறேன்.  அந்தப் பணத்தை வசூல் செய்ய அவ்வப்போது அந்த வீடுகளுக்குப் போகவேண்டி இருக்கு.  அப்போதான் நீங்க என்னைப் பார்த்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
 
÷சாரதா பெண்கள் விடுதியில் எனக்குத் தெரிஞ்ச அக்கா ஒருத்தர் இருக்கார். எம்.. மேக்ஸ் படிச்சிட்டு பேங்குல வேலை செய்யறார். அதனால, அவர் வேலை விட்டு வந்ததும் மாலையில் அந்த விடுதிக்குப் போய் தினமும் அவரிடம் கணக்குப் பாடம் படிக்கிறேன். அதனால் அந்த விடுதி நடத்தும் பாட்டி என்னிடம் சில வேலைகளை செய்துதரச் சொல்வார்.  விடுதியில் உள்ளவர்கள் அயன் செய்வதற்காகத் தரும் துணிகளை எங்கள் தெருவில் அயன் செய்யும் ஒருவரிடம் கொண்டுவந்து ù காடுத்து, அயன் செய்ததும் அதை விடுதியில் உள்ளவர்களிடம் கொண்டுபோய்  தருவேன். அந்தப் பாட்டிக்கு மருந்து மாத்திரைகள் வாங்கித் தருவேன். இதனால மாதா மாதம் எனக்குக் குறிப்பிட்ட ஒரு தொகை கிடைக்கிறது. அந்தப் பணத்தில்தான் நான் இதுநாள்வரை ஸ்கூல்ஃபீஸ் கட்டிகிட்டு வரேன் மிஸ்....அப்பாவுக்கு சிரமம் கொடுக்கறதில்லை.  இதுனாலதான் டியூஷன் வர சில நாள் நேரமாயிடுது மிஸ்... மன்னிச்சுடுங்க'' சுதா கண்கலங்க சொல்லி முடிக்கவும்,
சுற்றியிருந்த மாணவிகள் சுதாவை வைத்த கண் வாங்காமல் வியப்பாகப் பார்த்தனர். அவர்களுக்கு சுதாவின் மீதிருந்த மரியாதை அதிகமானது.

÷""இவ்வளவு பொறுப்பா உழைக்கிற உன்னை நான்கூட தப்பா நினைச்சிட்டேம்மா...'' என்று வருத்தப்பட்டுக் கூறினாள் வித்யா மிஸ்.

""பரவாயில்லை மிஸ், நான் இதை உங்களிடம் முன்பே சொல்லியிருக்கணும்...என்னைமன்னிச்சிடுங்க''

பூமாவுக்கு சுதாவின் மீதுஇருந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக நட்பாக மலரத் தொடங்கியது. இப்போதெல்லாம் "சுதா வந்தாச்சா?' என்று டியூஷன் மிஸ் கேட்பதே கிடையாது... ஆனால், அந்த விடுதியை நடத்தும் பாட்டி, தினமும் கேட்காமல் இருப்பதில்லை!

-இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி - சிறுவர் மணி 6.8.2018

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!