சிறுவர் இலக்கியத்தில் மிகப்பெரிய வெற்றிடம்....


சிறுவர் இலக்கியத்தில் மிகப்பெரிய வெற்றிடம்....
சிறுவர் இலக்கியப் படைப்பாளர் மற்றும் மூத்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு நேற்று அதிர்ந்தேன்.
காரணம், புதுவையில் சாகித்ய அகாதெமியும் ஆரோவில்த தமிழ் மரபு மையமும் இணைந்து நடத்திய “சிறுவர் இலக்கியம்” குறித்த ஒரு கருத்தரங்கில் (15.10.2016) அவரோடு ஒரே மேடையில் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது.


 “குழந்தைப் பாடல்களின் எதிர்காலம்” குறித்து அவர் பேச வந்தபோதுதான் அவர் எனக்கு முதன்முதலில் அறிமுகமானார். அதுமட்டுமல்ல நான் பேசப்போகும் “சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்” பற்றிய பேச்சுக்குத் இரண்டாவது அமர்வின் தலைவராகவும் வீற்றிருந்து நான் பேசியதைப் பொறுமையாகக் கேட்டவர். ஆனால், அந்தக் கட்டுரை திரு.முத்துகுமாரசுவாமி அவர்களின் உதவியோடு பழனிப்பா பிரதர்ஸ் நூலாக வெளியிட்டது. அதை அவர் பார்வைக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் இறைவன் திருவடியில் கலந்துவிட்டார். அதுதான் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இன்றிருப்பார் நாளை இல்லை....


மிகவும் எளிமையானவர். தானாகவே வந்து அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது நெஞ்சை நெகிழச் செய்தது. அவர் சிறுவர் இலக்கியத்திற்கு கடல் அளவில் பங்களிப்பை நல்கியிருக்கிறார் என்றால், நானனெல்லாம் ஒரு டம்பளர் அளவில் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரது இறப்பு, சிறுவர் இலக்கியத்தில் மிகப்பெரிய வெற்றிடம்....


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!