பாரதி கண்ட புதுமைப் பெண்கள் விருது 2020



பாரதி கண்ட புதுமைப் பெண்கள் விருது

104 பெண் சாதனையாளர்களுக்கு

ஈரோடு, ஜன.27: மனிதநேய தன்னார்லர்கள் அமைப்பு சார்பில் தமிழகத்தை சேர்ந்த 104 பேருக்கு பாரதி கண்ட புதுமைப்பெண்கள் 2020 என்ற பெண் சாதனையாளர்கள்  விருது அளிக்கப்பட்டது.

 ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவிற்கு, ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் கே.கே.பாலுசாமி தலைமை வகித்தார். வழக்குரைஞர் எல்.எஸ்.ஹரிசங்கர் வரவேற்றார்வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் விழாவை தொடங்கிவைத்தார்.
 கல்லூரி முதல்வர் என்.மரகதம், டாக்டர் எஸ்.ஈஸ்வரன், டாக்டர் ஜெ.கணேஷ், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பி.கந்தசாமி, மனிதநேய தன்னார்வலர்கள் அமைப்பின் நிறுவனர் எம்.ஜி.சரவணக்குமார் ஆகியோர் பேசினர்.








 எபிஜெ.அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுண்டேசன் அறங்காவலர் எபிஜெஎம்ஜெ.சேக்சலீம் பெண் சாதனையாளர்களுக்கு பாரதி கண்ட புதுமைப் பெண்கள் 2020 விருதுகளை வழங்கினார்.

 சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இடைமருதூர் கி.மஞ்சுளா, (தினமணி-முதன்மை உதவி ஆசிரியர்)  (சிறந்த எழுத்தாளர்-பெஸ்ட் ரைட்டர்) சொற்பொழிவாளர் சி.ஆர்.மஞ்சுளா, மரியதெரசா, கவிஞர் பூங்கொடி ஜெகநாதன்,  கலைமாமணி விருதுபெற்ற பெண் ஓதுவார் எம்.அருள்மொழி
கோவையை சேர்ந்த இலக்கியச் சொற்பொழிவாளரும், பட்டமன்றப் பேச்சாளருமான மகேஸ்வரி சற்குரு (சிறந்த பேச்சாளர்), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கதைசொல்லி சி.வனிதாமணி, கவிஞர் கே.மோனிஷா, வனச்சூழலியல் புகைப்படக் கலைஞர் திவ்யபாரதி ராமமூர்த்தி, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சொற்பொழிவாளர் சாமி மல்லிகா, தொழில்திறன் பயிற்சியாளர் யாகணேஸ்வரி பிரபா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.பவித்ராநீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் ஆர்.எம்.ஷகிதா, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியை ஆர்.ஹேம்குமாரி உள்ளிட்ட 104 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.







 முனைவர் சி.ஆர். மஞ்சுளா, முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா, திருமதி மகேஸ்வரி சற்குகு


 (ஸ்ரீவித்யா சந்திரமௌலி (இ.கி.ம.வின் மகள்), இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி ஈரோடு நிருபர் திரு விஜயபாஸ்கரன்)


 பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பெண்களை ஊக்குவிக்கவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம், தொழில், பெண் உரிமைகள் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, விலங்குகள் நலம், கலை மற்றும் கலாச்சாரம், பெண் குழந்தைகள் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களை தேர்வு செய்து விருதினை வழங்குவதாக மனிதநேய தன்னார்வலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஜனகராஜ் தெரிவித்தார்.  

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!