சிறுவர்களுக்கான கதைகள்- யானைக்கு உதவிய எறும்புகள்- இடைமருதூர் கி.மஞ்சுளா

சிறுவர்களுக்கான கதைகள்

யானைக்கு உதவிய எறும்புகள்

 இடைமருதூர் கி.மஞ்சுளா 

வெளியீடு- லாலி பாப் சிறுவர் உலகம். 

 #சிறுவர்_சிறுகதை_நூல்_வெளியீடு
எழுத்தாளர் #இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் எழுதிய யானைக்கு_உதவிய எறும்புகள் சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு ( 22.08.2021) ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை பல்லாவரத்தில் வெளியிடப்பட்டது.

குழந்தைக் கவிஞர் பணிச்செல்வர் #பி_வெங்கட்ராமன் அவர்கள் வெளியிட எழுத்தாளர் கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.


(பி வி என்று அழைக்கப்படும் திரு பி.வெங்கட்ராமன் அவர்கள் தனது இளமைக் காலத்தில் டிங்டாங் என்கிற சிறுவர் இதழை நடத்தியவர். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் கையெழுத்துப் பிரதியை முதன் முதலாக அச்சு கோர்க்கும் பணியையும் செய்து இருக்கிறார். குழந்தைக் கவிஞரின் சேவைகளை அரசுக்கு தெரியப்படுத்தி அவருக்கான சிறப்பு அஞ்சல் உறையும், அவர் படித்த பள்ளியில் அவர்களுக்கான சிலையும் நிறுவ ஏற்பாடு செய்தவர்)
கொரனா காலகட்டத்தின் நிலை உணர்ந்து மிக எளிமையாக இந்த விழா நடைபெற்றது.

மகிழ்ச்சி பரவட்டும்


 1. இடைமருதூர் கி.மஞ்சுளா 2.   திரு பி.வெங்கட்ராமன்

3.  கன்னிக்கோவில் இராஜா

 


 


#கதைகள்_செய்யும்_மாயம்

நாம் அனைவருமே கதைக் கேட்டு வளர்ந்தவர்கள்.
நமக்கு பிடித்த தலைவர்களின் கதைகளையும், நாம் சுதந்திரம் அடைந்த கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்கள்.
இன்றைய குழந்தைகளுக்கு அவர்களின் கற்பனை உலகை அறிமுகப்படுத்தக் கூடியவையாக கதைகளாக இருக்கின்றன. அந்த உலகத்தில் நுழைய கற்பனை சிறகுகள் அவசியமாகின்றன.
#தினமணி நாளிதழில் இணைப்பிதழாக வரும் சிறுவர்மணியில் பல கதைகளை எழுதிவருபவர் இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள்.
ஏற்கனவே பல சிறுவர் நூல்களை. தந்திருக்கிறார். 

அண்மைக் தொகுப்பாக யானைக்குஉதவியஎறும்புகள் வெளிவருகிறது.
இதில் 25க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. இந்நூலை #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
சிறுவர் இலக்கியத்திற்கு இன்னும் பல கதை சிறகுகள் தேவையாயிருக்கிறது.


ஓவியங்கள்: சுமன் & டி.என்.ராஜன்
நூல் வடிவமைப்பு : கன்னிக்கோவில் இராஜா

 

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!