இடைமருதூர் கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வு -"மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்" நூல் வெளியீடு- எழுத்துச் சிற்பி - விருது

முனைவர் பட்ட நூல் வெளியீடு, அறிமுக உரை. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு வட்டார நூலகம், ஆழ்வார்பேட்டை வாசகர் வட்டம் மற்றும் மணிவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்திய இடைமருதூர் கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வான “மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்” என்கிற நூல் வெளியீடும், அப்பா ஓர் அவதாரம் எனும் நூல் அறிமுக விழாவும் (5.6.2022) பலருடைய ஆசிரிவாதத்தோடு இனிதே நடைபெற்றது. அழைப்பிதழில் உள்ளபடி இல்லாமல் சில மாற்றங்களோடு இந்நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்த இடைமருதூர் கி.மஞ்சுளாவின் டாக்டர் பட்ட ஆய்வு “மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்” என்ற நூல் அறிஞர்கள் பலர் முன்னிலையில் எதிர்பார்த்ததைவிட அற்புதமான - நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அமைந்தது இறைவனின் திருவருள்தான். பேராசிரியர் திரு.இராம. குருநாதன் அவர்கள் தலைமையிலும், புதுகை தருமராசன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குழந்தைக் கவிஞர் திரு அழவள்ளியப்பா அவர்களின் திருமகள் தேவி நாச்சியப்பன், என் தோழிகளான, பொதிகை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திருமதி கோதை ஜோதிலெட்சுமி, கவிஞரும் பேராசிரியருமான திருமதி ஆதிரா முல்லை, கவிஞர் திருமதி மகேஸ்வரி சிவகுமார், பொதிகை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான என் நட்புக்குரிய கவிஞர் திரு. விஜய கிருஷ்ணன், புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு புதுகை தருமராசன், ஆன்மீகக் களஞ்சியம் பத்திரிகை ஆசிரியர் திரு தெள்ளாறு ஈ.மணி, கவிஞர் இதயகீதம் திரு. இராமானுஜம், ஆழ்வார்பேட்டை நூலக அதிகாரி திரு இளங்கோ, கனவுத் தமிழ் ஆசிரியர் திரு அக்னி பாரதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆய்வு நூலை திருமதி தேவி நாச்சியப்பன் அவர்கள் வெளியிட புதுகை தருமராசன் அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை முன்னிலை உரை வழங்கினார். பேராசிரியர் திரு இராம.குருநாதன் ஐயா அவர்கள் இந்த ஆய்வு நூல் குறித்து மிக விரிவானதொரு அறிமுக உரையை கோடை மழைபோல் நிகழ்த்தி அவையில் இருந்தோரை வியப்பில் ஆழ்த்தினார். இன்றைக்குப் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிக்கு வந்து நிகழ்ச்சியை அலங்கரிக்கும் பேச்சாளர்கள் பலருள் உண்மையான நட்புக்காக மட்டுமே வந்திருந்து, தோளோடு தோள் கொடுத்து அற்புத உரைகளை வழங்கி உதவிய அனைவரும் மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லலாம். அவர்கள் அனைவரின் திருவடிகளையும் வணங்குகிறேன். இந்நிகழ்ச்சியில், பொது நூலகத் துறை, வட்டார நூலக வாசகர் வட்டம் எனக்கு “எழுத்துச் சிற்பி” என்ற விருதை வழங்கி கௌரவித்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...... நிகழ்ச்சியில் சிறு கல் ..... மேற்குறிப்பிட்டபடி நட்பை மதிக்கும் நண்பர்கள் எனக்கு இப்படியும் பலர் அமைய.... இடைச்செருகல் என்பது போல சில நம்பிக்கை துரோகம் செய்யும் உறவுகளும் நட்புகளும் இதில் இருந்ததை முன்னமே அறிந்து... “இளைதாக முள் மரம் கொய்க” என்பதற்கு இணங்க.... அந்தச் இடைச்செருகல்களை வெட்டி எறிந்துவிட்டு இந்நிகழ்ச்சி நடந்ததுதான் இந்நிகழ்வில் நேர்ந்த சிறு மாற்றம். அதுகூட சிறப்பாகத்தான் இருந்தது. அழைப்பிதழ் அடித்த பிறகு, இந்நிகழ்ச்சியில் சிறு மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம்... பதிப்பகத்தாரின் நம்பிக்கை துரோகம். “அப்பா ஓர் அவதாரம்” தொகுப்பு நூலை வெளியிடுகிறோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளைத் தட்டிக் கழித்துவிட்டு, முன்னெச்சரிக்கை இல்லாமல், கடைசி நேரத்தில் சகோதரர்கள் இருவரும் என் உழைப்பையும், பணத்தையும், காலத்தையும் விரயம் செய்ய வைத்துவிட்டனர். அந்த நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும். “அக்கா அக்கா” என்றே அழைத்து இறுதியில் நம்பிக்கைத் துரோகம் எனும் வாளால் தன் உடன்பிறவா சகோதரியை வெட்டி வீழ்த்திய சகோதரர்கள் வாய்ச்சொல்லில் சிறந்த வீரர்கள்.... ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் உத்தமர்கள். கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக எனும் குறளையே படித்தறியாத பேதைகள்... பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். ஒரு பதிப்பகத்தார்-எழுத்தாளர் இடையே உள்ள அணுகுமுறை என்ன, கடமை என்ன, செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்றுகூடத் தெரியாமல் பதிப்பகம் வைத்து நடத்துவது கேலிக்குரியது. இதில் பாதிக்கப்படுபவர்கள் நூலாசிரியர்கள்தான் என்பதைக்கூட அறியாதது அவர்களது மிகப்பெரிய அறியாமை. நானும்கூட 8 நூல்கள் பதிப்பித்திருக்கிறேன். இப்படியொரு சிக்கல் எநக்கு நேர்ந்ததில்லை. நானும் பதிப்பாளர்தான். பல பத்திரிகையில் கட்டுரைகளாக எழுதித்தள்ளி.... ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் உத்தமர்கள்.... வாய்ச்சொல்லில் வீரர்கள்... இந்தச் சொலவடை இவ்விருவருக்கு மிகவும் பொருந்தும். இதை எனக்கு உணர்த்தி, முன்பே எச்சரிக்கை செய்த இறைவனுக்கு நன்றி. குலத்தளவே ஆகுமாம் குணம் – என்ற ஔவையாரின் வைர வரிகள் இப்போது என் நினைவுக்கு வருகிறது. பெண்பாற் புலவரான ஔவையார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி... பாருங்கள். அதனால், எனது கடின உழைப்பால் உருவான “அப்பா ஓர் அவதாரம்” எனும் தொகுப்பு நூல் அந்த அரங்கத்தில் நேற்று வெளியிட முடியாமலும், வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாமலுல் போய்விட்டாலும், அந்நூல் குறித்த அற்புதமான ஓர் அறிமுக உரையை, திருமதி, தேவி நாச்சியப்பன் அவர்களும், திரு.விஜய கிருஷ்ணன் அவர்கள் வழங்கி அப்பாக்களைப் பெருமைப்படுத்திவிட்டனர். பதிப்பகத்தார் செய்த மிகப்பெரிய தவறால், இந்நூல் தற்சமயம் வாசகர்களுக்குக் கிடைக்காமல் போனதற்காக வருந்துகிறேன். மேலும், இந்நூல் வேறு ஒரு பதிப்பகத்தால், ஒரு சில மாற்றங்களுடன், இந்நூலைவிட மிகச் சிறப்பாக விரைவில் வாசகர்களுக்குக் கிடைக்கும் என்பதையும் கூறி மகிழ்கிறேன். வந்ததை வரவில் வைப்போம்.... சென்றதை செலவில் வைப்போம்... எல்லாம் அவன் செயல் என்பதில் மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பவள் நான். இந்நூல் மூலம் நான் படித்த அனுபவப் பாடம்.... “பத்திரிகைக்குக் கட்டுரை எழுதும் கட்டுரையாளருடன் நட்பு முறையிலோ, உறவு முறையிலோ... அவர்களை அணுகக்கூடாது என்பதுதான். ............. பதிப்பகத்தாருக்கு சொந்தமான பக்கங்களைத் தவிர (பதிப்புரை, அணிந்துரை, கதை) அப்பா ஓர் அவதாரம் நூலில் வேறு எதையும் அவர்கள் பயன்படுத்தவோ, பதிப்பிக்கவோ உரிமை மறுக்கப்படுகிறது என்பதையும் ஒரு தொகுப்பாசிரியராக இருக்கும் நான் அவர்களுக்குக் கூறிக்கொள்ள விழைகிறேன். இடைமருதூர் கி.மஞ்சுளா (6.6.2022)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!