சிறுவர் இலக்கியம்- தாத்தா சொன்ன கதைகள் இ.புக்கில் பதிவேற்றம்

வணக்கம் என் அன்பு நட்பு வட்டங்களே... கையிலேயே உலகம் வந்துவிட்டது. இன்றைக்குப் பலரும் மொபைல் ஆப் மூலம்தான் பலவற்றையும் பார்த்து, படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில்...காலங்கள்தோறும் மாற்றம் உண்டு. நாமும் காலத்துக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்ளப் பழக வேண்டும்... காலத்தோடு ஒட்டிவாழ வேண்டும். எந்த மாற்றத்தையும் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும்... அந்த வரையில் முதன் முறையாக சிறுவர் இலக்கியமான எனது "தாத்தா சொன்ன கதைகள்" (இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான) நூல் இ.புக்ககாக https://www.pustaka.co.in நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்ர் திரு. ஜனனி ரமேஷ் அவர்களால் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலும் மிக விரைவில் வெளியாகும். சங்க இலக்கியம், சமய இலக்கியம், ஆய்விலக்கியம், படைப்பிலக்கியம் (கதை, நாடகம், பாடல் நாவல்), மொழிபெயர்ப்பு இலக்கியம், சிறுவர் இலக்கியம் (என்னுடைய 33 நூல்கள்) முதலியவற்றை தொடர்ந்து இந்த ஆப்பைப் பயன்படுத்திப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் நண்பர்களே... வாசகர்களே...

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!