தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும் - சைவத்தில்… (சைவ நெறி -அன்பு நெறி - அருள்நெறி) இடைமருதூர் கி.மஞ்சுளா, எம்.ஏ., எம்ஃபில், . முன்னுரை அன்பே கடவுள் என்பதுதான் சைவத்தின் தலையாய மந்திரம். அன்பு, உயிரிரக்கம், ஜீவகாருண்யம், கருணை இவை அனைத்தும் சைவத்தின் ஒழுக்க நெறிகளாகும். சைவ சமயத்தின் தனிப்பெருங் கடவுளான அன்பே வடிவான சிவபெருமானை – ஆண்டவனை வணங்கும் அன்பர்கள், அவ்வன்பை இறைவனிடம் மட்டுமல்லாது, உலகில் உள்ள பிற உயிர்களிடமும் காட்டி, மனிதனாகப் பிறந்தவர்கள் தெய்வ நிலைக்கு உயரமுடியும் என்பதை வலியுறுத்தியது சைவ சமயம். கொல்லாமை, புலால் உண்ணாமையே சைவத்தின் ஒழுக்க நெறிகளுள் தலையாயது. இந்நெறி வழி சைவத்தின் மாண்பையும், அன்பின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தின் அவசியத்தையும், தாவர உணவின் மகத்துவத்தையும் மேன்மைகளையும், தாவர உணவு தவிர்த்த புலால் உணவால் ஏற்படும் தீமைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். சமயமும் மதமும் சமயம் வேறு, மதம் வேறு. மதம் என்னும் சொல், “கொள்கை ” என்னும் பொருளில் வழங்கி வருகிறது. மணிமேகலைக் காப்பியத்தில் “சமயம் ” என்ற
"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி: பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வாசித
தினமணி சிறுவர் மணியில் வெளியான "செல்லாக்காசு" என்ற சிறுகதையை சாகித்ய அகாதெமியினர் தேர்வு செய்து "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்னும் நூலில் இணைத்திருக்கிறார்கள். அந்தக் கதையை என்னை எழுதத் தூண்டியது என் தாய் - தந்தை என்னிடம் கொடுத்த அன்றைய காசுகள்தான். படத்தைப் பாருங்கள் புரியும். மேலும் அந்நூல் குறித்த ஆய்வுரையும் வழங்க என்னைப் பணித்திருக்கிறார்கள் சாகித்ய அகாதெமியினர். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்.... மகாகவி பாரதியார் , மறைமலையடிகள், பாரதிதாசன், பெரிசாமித்தூரன், கி.வா.ஜ., அழ.வள்ளிப்பா, தமிழ்ஒளி, வானதி திருநாவுக்கரசு, வாண்டுமாமா முதலிய எழுத்து ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் உள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. (தாய்-தந்தை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத சொத்து இவை. 1975களில் இந்தக் காசுகளை வைத்துப் பொருள்களை வாங்கிய அந்த அனுபவம், நினைவு நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது.
Comments
Post a Comment