வாரியாரின் வாரிசாம்....

தினமணி வாசகரும் என் நட்பிற்கு உரியவருமான பெரியவர் கவிஞர் அ.வெ. முல்லை நிலவழகன் அவர்கள். இவர் வானளாவிய தமிழ்ப் பேரவை என்ற ஓர் அமைப்பின் நிறுவனர். தினமணியில் என்னுடைய படைப்புகளைப் படித்துவிட்டு மிகவும் வியந்து போவார். காரணம், உங்களுடைய மொழி நடை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஆன்மிகக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல், ஆராய்ச்சி இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் எல்லாவற்றிலும் உங்களால் எப்படி இப்படி ஆழங்கால்பட்டு எழுதமுடிகிறது என்பதுதான் அவருடைய முதல் கேள்வியாக இருக்கும். என் படைப்புகளைப் பத்திரிகையில் பார்த்த அன்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பல தமிழறிஞர்களுள் முல்லை நிலவழகன் குறிப்பிடத்தக்கவர். அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமணி வெள்ளிமணியில் வெளியான அபாயம் வராமல் இருக்க உபாயம் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு வியந்து வியந்து போய் தொலைபேசியில் பேசித் தீர்த்தவர். உடனே ஒரு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே படியுங்கள் வணக்கம். நாத்திகம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், நாத்திகத் தலைவர்களின் பேச்சுக்கு எவரும் ஈடுகொடுக்க முடியாத காலகட்டத்தில், வணக்கத்திற்குரிய வாரியார் அவர்கள், தனக்கே உரிய பேச்சுத்திறமையால் ஆன்மிகக் கருத்தை மிக ஆழமாக மக்கள் மனதில் பதித்ததை எவரும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. அத்தகைய ஒருவர் இந்த சின்னத்திரை காலகட்டத்தில் இல்லையே என வருந்தியதுண்டு பல நாட்கள். அக்குறையை இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் அபாயம் வராமல் இருக்க உபாயம் என்னும் தலைப்பில் 31.10.14 அன்று வெளிவந்த தினமணி வெள்ளிமணி வழியே தீர்த்துவிட்டார் என்றே கருதுகிறேன். வாரியார் மேடையில் சொற்பொழிவாற்றினார். இவர் எழுத்தில் கட்டுரையாக வடிக்கிறார் அவ்வளவே. எழுதுகின்ற நடை, எடுத்து வைக்கின்ற குறிப்பேடுகள், வாரியையே நினைவூட்டுகிறது. பலமுறை படித்துவிட்டேன். வாரியாரின் வாரிசாக வளரும் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்பு முல்லை நிலவழகன்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!