மூன்றாவது...தாருங்கள்

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், நாவண்மை உடையவர், அருங்குணம் கொண்டவர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஒரு முறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்கு பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நூற்றுக்காரத் தெரு என்றும் அழைப்பர். இந்த இண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மகாவித்துவான், இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று கூறினார். அவர் கூறியதில் உள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல். (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) இரவில் சுண்ணாம்பை அவசியம் ஏற்பட்டாலொழிய இரவல் வாங்கக்கூடாது என்று கூறுவது முன்னோர் வாக்கு. அவ்வாறு வாங்கினால் மூன்றாவது தாருங்கள் என்று கூற வேண்டும் என்பார்கள். இது இன்றைக்கும் வழக்கில் உள்ளது. அதைத்தான் மகாவித்துவான் நகைச்சுவை உணர்வுடன் கூறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!