புதைபொருளாகும் பொருளாதாரம்

இடைமருதூர் கி.மஞ்சுளா உள்ளதைச் சொல்கிறேன்....நல்லதைச் சொல்கிறேன்... பொருளாதாரம் என்பது பொருளைச் சார்ந்ததா அல்லது மக்களைச் சார்ந்ததா அல்லது சமுதாயத்தைச் சார்ந்ததா...படித்தவர்களுக்கு மட்டுமா அல்லது பாமர்ர்களுக்குமா.... பொருலாதாரம் என்பது வெற்றுப் பேச்சா அல்லு வாழ்க்கை நடைமுறைக்கு சாத்தியமா... இத்தகைய கேள்விகள் பாமரர்கள்கூட இன்றைய நாள்களில் கேட்டகத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதாரம் எந்ற சொல்லின் மூலம், கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதன் பொருள் வீட்டின் நிர்வாகம். உள்ளதைக் கொண்டு தேவைகளை முடியும் மட்டும் நிறைவுசெய்து கொள்வது. பொருளாதாரம் சமூகவியலைச் சார்ந்தது. அது பொருள், சேவையின் உற்பத்தி, பங்கீடு, நுகர்வுகளைப் பற்றிய கல்வி. இக்கல்வியைப் பற்றிப் படித்தால் மட்டும் போதுமா... வாழ்க்கைக்குப் பயன்படவேண்டாமா... அதுதானே கல்வியின் பயன்! ஆடம்ஸ்மித் என்பவர், பொருளாதாரம் என்பது மனித வாழ்வையும் அவர் பொருள் தேவைகளையும் பற்றி அறிவது என்கிறார். இதில் ஒரு பகுதி பொருலாதார வளம் என்றால், மற்ற முக்கியமான பகுதி மனித வளம் என்கிறார் ஆல்பிரட் மார்ஷல். பொருளாதாரம் மக்களைச் சார்ந்தது. அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பொருள் வளங்களைப் பெருக்கி, வாழ்வின் தரத்தை உயர்த்தும் ஓர் உன்னத அறிவு. இதில் மக்களே முதன்மை பெறுகிறார்கள். மனித வாழ்க்கை, பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. பொருளாதாரத் தத்துவம் முதலில் ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி இவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. குடும்பத்தில் தோன்றும் இந்தப் பொருளாதாரம் விரிந்து அகண்டாகாரமான பெரும் அரசியல் முறை வரையிலும் பரவியிருக்கிறது. ஒரு குடும்பம் மற்றும் அதன் அன்றாடத் தேவைகள், கணவன் தொழில் செய்து அல்லது வேலை செய்து உழைப்பது, மனைவி வீட்டிருந்து இல்லறத்தை நிர்வகிப்பது, குழந்தைகளை வளர்ப்பது. இவையெல்லாம் பொருளாதாரத்தின் அம்சங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால், இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது...! கண்வன் - மனைவி இருவரும் சம்பாதித்தாலும், பொருலாதார நெருக்கடிதான். குழந்தை, பெற்றோர், ஓய்வு, நிம்மதி, அமைதி என இவற்றை இழந்து பொருளாதாரத்தோடு போராடட வேண்டிய சூழ்நிலை. இவை தவிர, எந்த நேரம் எந்தப் பொருளின் விலை உயரும் என்று கூறமுடியாத - நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசிப் பிரச்சனையில் பொருளாதாரம் குறித்து திட்டமிடுவதில் என்ன லாபம்... சம்பாதிப்பது பொருளாதாரத்துக்கே என்றாகிப் போகும்போது இன்றைய குடும்பத் தலைவன் தன்னுடைய சந்ததிகளுக்கென்று எதை சேமித்து வைக்கமுடியும். வாழ்க்கையில் ஒருவன் பொருளை மிகவும் சாமர்த்தியமாகச் சேர்ந்து, எதற்கும் செலவு செய்யாமல் பாதுகாத்து வைக்கிறான். தான் சேர்ந்த செல்வத்திலிருந்து தன் தேவைகளைக்கூடச் செய்து கொள்ளாத ஒருவனை லோபி என்கிறோம். தன்னிடம் இருக்கும் செல்வத்தை ஒன்று திரட்டிய அருமை தெரியாது மனம் போனபடி செலவு செய்து அந்தச் செல்வத்தை அழித்து வருபவனை ஊதாரி என்கிறோம். ஏனென்றால், இவர்கள் இருவரும் பொருளாதாரத்தின் தன்மையை உணராதவர்கள் என்பதால்தான். இன்றைய வாழ்வில் எல்லோருக்கும் பொருளாதாரம் என்பது புதைபொருள் ாராய்ச்சியாகப் போய்விட்டதென்னவோ உண்மை. மக்கள் அடிப்படையை மறந்து அவல வாழ்வு நடத்துகிறார்கள். செல்வத்தைச் சேர்த்துச் செலவிடுகிறார்கள். ஆனால், வாழ்வின் சுகத்தைப் பெறுகிறார்களா என்றால், இல்லை. செல்வம் சேரச்சேர தேவைப் பட்டியல் நீண்டு கொண்டல்லவா சென்றுகொண்டிருக்கிறது. செல்வம் உடையவனுக்கும் சரி, இல்லாதவனுக்கும் சரி, தேவைப்பட்டியல் இருக்கவே செய்கிறது. இல்லாதவன் பட்டியலைவிடச் சற்று அதிகமாகவே இருக்கிறது செல்வம் வைத்திருப்பவனின் பட்டியல். மேற்குறித்த கருத்துகளெல்லாம் இன்று நேற்று உதயமானவை அல்ல... 1958-ஆம் ஆண்டுக்கு முன்பே ரெட்டியார் என்பவர் வாழ்க்கைக் கலை என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பொருளாதார முன்னேற்றம் உண்டா என்ற கேள்விக்கு விடை என்னவோ.....கேள்விக்குறிதான்! ஒவ்வொரு நாடும், அந்நாட்டிலுள்ள மக்களும் பொருளாதாரத்தில் தன்னிறைவும், சமத்துவமும் பெறவேண்டும் என்பதுதான் உலகப் பொருளாதார நல்லறிஞர்களின் நோக்கம். பொருளாதாரத்தைக் கொண்டு மனிதனைப் பிரித்துப் பார்க்கும் வழக்கத்தை ஒழித்து, மனிதனைக் கொண்டு பொருளைப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் வேண்டும் - என்கிறார் வேதாந்திரி மகரிஷி! தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திவோம் என்றார் அன்றே மகாகவி பாரதி என்ற தீர்க்கதரிசி. பாரதியின் வாக்குப் பொய்க்கட்டுமே......நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணட்டுமே..... இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வேறு வழியே இல்லை....

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!