புத்தரின் தியானம் என்னும் மந்திரம்

இன்று ஆகஸ்டு 17. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஆம், தியானம் என்றால் என்ன என்பதை மிகவும் எளிமையாகப் பிரிய வைத்த அந்த நூலுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஒரு காட்டு வழியே பயணித்த முனிவர் நீண்ட பயணத்தாலும் பசியாலும் களைப்படைந்தார். உண்பதற்கு காய்கறிகள் கிடைக்குமா என சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு, மந்தையை கவனித்துக் கொண்டிருந்த ஒரு மாடு மேய்ப்பவரன் கண்ணில் பட்டான். அவனை அணுகி, உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா எனக் கேட்டார். உடனே முனிவருக்காக பால் சகறந்து அருந்தக் கொடுத்தான் மாடு மேய்ப்பவன். பசி தீர்ந்த அவர், தாம் ஒரு வல்லமை பெற்ற முனிவர் என்பதையும், இறைவனியமிருந்து அவனுக்காக எதையும் பெற்றுத்தர முடியும் என்பதையும் சொன்னார். ஆனால், அவனோ ஓர் அலட்சிய சிரிப்புடன் எனக்குத் தேவையான எல்லாம் இந்த மாடுகள் மூலம் கிடைக்கின்றன. வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேவை என்று எதுவும் இல்லை என்றான். ஏதோ ஒருவிதத்தில் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என யோசித்த முனிவர், சரி.... உனக்கு உலகிலேயே பிடித்தது எது என்றார். அப்போதும் மந்தையில் இருந்த ஒரு மாட்டை சுட்டிக் காட்டினான். உடனே முனிவர், உன்னிடம் மீண்டும் ஒரு உதவி கேட்கிறேன். அந்தக குகையில் போய் அமர்ந்துகொல். உனக்குப் பிடித்த உனது மாட்டை மனதில் நினைத்தபடி, நான் - அது என்னும் பொருள் கொண்ட வார்த்தையான சோ-ஹம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிரு. அதுவரை உனது மந்தையை நான் கவனித்துக் கொள்கிறேன். என்றார். அவனும் சம்மதித்தான். மூன்று நாள்கள் கழிந்தன. குகை வாயிலில் நின்றபடி முனிவர் அவனை வருமாறு அழைத்தார். ஆன்ல், உள்ளிருந்து ஆளுக்கு பதில் குரல்தான் வந்தது. இத்தனை பெரிய கொம்புகளை வைத்துக்கொண்டு இந்த குறுகிய குகு வாசல் வழியாக என்னால் வெளியே வர முடியாது என்று தீர்க்கமாக சொன்னது. தியானம் தந்த இன்பத்தில் தன்னையே மறந்துவிட்டான் மாடு மேய்த்து வந்தவன். ஆம், மனதளவில் அவனே மாடாகிப் போனான். சரி...சரி.... வெளியே வரவேண்டாம். ஆனால் சோ-ஹம் என்பதற்கு பதிலாக சிவோஹம் அதாவது பிரம்மம் நான் என்ற பொருள் கொண்ட வார்த்தையை சொல்லிக் கொண்டிரு என்றார் முனிவர். அவர் சொன்னபடி செய்ததால் சிலமணி நேரத்திலேயே மிக உயர்ந்த ஞான நிலையை அடைந்தான். மாடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த சாதாரண மனிதன். தந்திர யோகம் பற்றி விளக்கி பெரியோர்களால் காலம் காலமாக சொல்லப்படுவது இந்தக் கதை. மனம், தான் பழகிய பாதையில் செல்வதையே விரும்புகிறது. அதன் போக்கிலேயே விட்டு சரியான தருணத்தில் இறைவன் பக்கம் திசை திரும்புவதே தந்திர யோகத்தின் சிறப்பு அம்சம். ஆனால், சரியான நேரத்தில் நல்ல குருநாதரின் வழிகாட்டுதல் இல்லையென்றால் ஆபத்தில் போய்த்தான் முடியும்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!