தியாகமே துறவின் அஸ்திவாரம்

சுவாமி விவேகானந்தர் துறவு பூணக் காரணமாக இருந்த அவர் அன்னை மிகப்பெரிய ஞான அறிவுப் பேரொளி. புலிக்குப் பிறந்தது பின் எப்படி இருக்கும்.... சுவாமி விவேகானந்தர் நரேந்திரனாக இருந்தபோது துறவறம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால், தமது தாயாரின் அனுமதி வேண்டும் என்று காத்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாயாரிடம் தமது துறவு விருப்பத்தைத் தெரிவிப்பார். ஒருமுறை அவ்வாறு துறவுக்கு அனுமதி கேட்டபோது, சமையலறைக்குப் போய் அங்கிருந்து கத்தியை எடுத்து வா என்றார் அன்னை. விவேகானந்தர் கத்தியைக் கொண்டு வந்து கொடுத்ததும், கொஞ்சநாள் போகட்டும், பிறகு நீ சன்னியாசி ஆகலாம் என்று கூறிவிட்டார். ஒருமுறை கத்தியைக் கொண்டு வந்து விவேகானந்தர் கொடுத்ததும், இனி துறவுக்குப் போகலாம் தடையில்லை என்றார். துறவுக்கு அனுமதி கோரும் பொழுதெல்லாம் கத்தியைக் கொண்டுவரச் சொன்ன காரணம் என்ன என்று அன்னையைக் கேட்டார் விவேகானந்தர். அன்னை சிரித்துக்கொண்டே, முன்பு ஒவ்வொரு முறை நான் கத்தியைக் கொண்டுவரச் சொன்ன போதும், பாதுகாப்பான கைப்படியை நீ வைத்துக்கொண்டு ஆபத்தான கூர்மைப் பகுதியை என் பக்கம் நீட்டுவாய். ஆபத்து பிறருக்கு, பாதுகாப்பு உனக்கு என்கிற சுயநல உணர்ச்சியின் வெளிப்பாடு அது. ஆனால், நாளாக நாளாக ஆபத்தான கூர் பகுதியை நீ பிடித்துக் கொண்டு, பாதுகாப்பான கைப்பிடி பக்கத்தை என் பக்கம் நீட்ட்த் தொடங்கினாய். மகனே, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற சுயநலம் நீங்கிப் பிறரைப் பாதுகாக்க வேண்டும் என்கிற தியாக உணர்வு உனக்கு ஏற்பட்ட பிறகே துறவுக்கு அனுப்ப சம்மதித்தேன் என்றாராம். சுயநலம் உடைய எவரும் துறவி ஆகமுடியாது. தியாகமே துறவின் அஸ்திவாரம் என்பதை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வழி அறிகிறோம். தியாகத்தைவிடச் சிறந்தது இந்த உலகில் வேறு என்ன இருக்கிறது... தியாகமே வடிவான தாயிடமிருந்து தியாகத்தைப் பற்றி அறிந்துகொண்டது சுவாமி மட்டுமல்ல... நாமும்தான்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!