வள்ளலார் - பசிப்பிணி மருத்துவர்



இன்று தைப்பூசம். வள்ளலார் பெருமான் சாலை (உடற்பசி), சங்கம்(அறிவுப்பசி) , சபை(வறியோர்க்கு, எளியோர்க்கு உதவுதல்) மூன்றையும் நிறுவி, மேற்கண்ட பசிகளைப் போக்கிய பசிப்பிணி மருத்துவராவார்.  


அருட்பிரகாச வள்ளலாரின் கருத்துகள் சிலவற்றையாவது நாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிப்பது நல்லது.
சென்ற ஆண்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள  - அவர் பலகாலம் வாழ்ந்த - முருகன் கண்ணாடியில் தரிசனம் தந்த அந்தச் சிறிய அறையில் அமரும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் இன்று இருந்த இடத்திலிருந்தே அவரை வணங்கி மகிழ்கிறேன்.

 இன்று அலுவலகத்தில் இருவருக்கு மதிய உணவு வழங்க  எம்பெருமான் எனக்கு அருள் புரிந்துள்ளது நான் பெற்ற பெரும் பேறு.

என்றாலும் அவருடைய அருள் வாக்குகள் சிலவற்றை கைக்கொள்வோம்.

1. புலால் உண்பதைத் தவிர்ப்பேன்.
2. மரம், செடி, கொடிகளையும் என் தோழன் போல பாவிப்பேன்.
3. பசித்தோர்க்கு உணவளிப்பேன்.
4. ஏழைகளுக்கு இரங்குவேன், உதவி செய்வேன்.
5. கண்டு, கேட்டு, படித்த நல்ல செய்திகளைப் பலருக்கும் தெரிவிப்பேன்.
6. பொய் பேசாதிருப்பேன்.
7. உத்தமர்களின் உறவையே நாடுவேன்
8. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசமாட்டேன்.
9. பெருநெறியில் (சிவநெறி-சைவம்) செல்வேன்
10. நோயற்ற வாழ்வு வாழ்வேன்...

படம்: ஓவியத் தந்தை கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்


வள்ளலாரை நினைக்கும்போது என் தந்தையின் நினைவு மறவாது வந்துவிடும். காரணம், என் தந்தை கூறிய தாரக மந்திரம் இது:

"யார் எது கேட்டாலும் உன்னால் கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, ஆனால் பசி என்று ஒருவர் கேட்டால் உடனே அவருக்கு உதவு, காரணம் யாரும் பசி என்று பொய் சொல்லிக் காடு வாங்கமாட்டார்கள். அவர் பசியைப் போக்க பணமாகத் தா. ஆனால், அவருக்கு உணவு வாங்கி, அவர் பசியை உடனே போக்குவது மிகச்சிறந்தது" என்று என் சின்னஞ்சிறு வயதில் அவர் பதித்த அந்த வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. வள்ளலாரும்  இந்தப் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்பதற்காகவே பலமுறை நமக்கு வலியுறுத்திக் கூறியுள்ளார். அன்றாடம், நம் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரேனும் ஒருவரின் பசியைப் போக்க முயற்சி செய்வோம்...

Comments

  1. கொரனோ தொற்றினால் அல்லலுறும் இவ்வேளையில் ஆசாரக்கோவையை எடுத்துக்காட்டி எழுதப்பெற்ற கட்டுரை அருமையாக இருந்தது. இளைய தலைமுறையினர் அறிந்து பின்பற்றவேண்டியவை. பொதுநோக்கம், அழுத்தமான பயனுள்ள சொல்லாடல்களைப் படிக்கும்போது, மணிவாசகப்ரியா என்ற பெயரினைக் கொண்டும் இடைமருதூர் மஞ்சுளாவோ என நினைத்தேன். திருவாசகப்ரியாவின் மொழிநடை தனித்துவம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!