பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள்-4



பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள்-4

தைப்பூசம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் சின்னாளப்பட்டி சு.ம.பாலகிருஷ்ணனை மறக்கவே முடியாது. அவர் ஒரு வள்ளலார் பித்தர் சின்னாளப்பட்டியில் சமரச சுத்த சன்மார்க்க  அறக்கட்டளை ஒன்றை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி, அதன் மூலம் அருட்பிரகாச வள்ளலாரின் பெருமைகளை உலகறியச் செய்து வருபவர்.  இவர் அறிமுகம் கூட விசித்திரமானது. காரணம், தினமணிக்கு வந்த  ஒரு தப்பான தொலைபேசி அழைப்பின் மூலம் (ராங் நம்பர்) இவர் என்னுடன் தந்தை-மகள் முறையில் நட்பு கொண்டவர் (கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்). எனக்கு எப்போது கடிதம் எழுதினாலும், “எங்கிருந்தோ வந்தாள்…மஞ்சுளா தேவி….” என்றுதான் எழுதுவார்.
அதுமட்டுமல்ல…. மஞ்சுளா தேவிக்கு என்று (மகளுக்கு) அவர் சின்னாளப்பட்டியிலிருந்து வாங்கி (கொரியரில்) அனுப்பிய சின்னாளப்பட்டி சேலையில் அவரைப் போய் பார்க்க வேண்டும் என்று சின்னாளப்பட்டி சென்றிருந்தபோது எடுத்த நிழற்படம். அந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் உள்ளோர் காட்டிய அன்பு மழையில் நனைந்தேன். அவரின் நினைவு இப்போது வள்ளலார் பெருமானால் வந்திருக்கிறது….






Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!