பரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள் -1



நானும் நகைச்சுவை நடிகர் சார்லி அவர்களும் ஒரு சாலை மாணாக்கர்கள் (ஒரே பல்கலை மாணவர்கள்) என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது. ஆம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருவரும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறோம். அடியேன் சென்ற வாரம்தான் ஆய்வேட்டை பல்கலையில் சமர்ப்பித்தேன். உடனே அவருடைய நினைவு வந்தது. சார்லி சார் ஆய்வை முடித்துவிட்டாரா என்பது தெரியவில்லையே என்று. செம்மூதாய் பதிப்பகம் நடத்திய  தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும் என்ற ஒரு கருத்தரங்கில்தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் சீஃப்கெஸ்ட், நான், வாழ்த்துரை மற்றும் (திருமதி சுஜாதா அவர்களின் நூலை) விமர்சன உரை. எளிமையான நகைச்சுவைக் கலைஞர் அவர். அவரே வலிய வந்து “நீங்கள்தான் இடைமருதூர் கி.மஞ்சுளா? உங்களுடைய கட்டுரைகளை நான் தினமணியில் படித் திருக்கிறேன். நல்லா எழுதறீங்க… என்றார். உடன் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் தந்து, என்னுடையதை வாங்கிக் கொண்டார்.
அதற்கு நன்றி கூறிய நான், சார், உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் அடிவாங்கியதுதான் நினைவுக்கு வருகிறது என்றவுடன், “மறக்கமுடியுமா அந்த அடியை” எனக் கூறி சிரித்தார். அந்தப் புன்சிரிப்புடன் எடுத்துதுதான் இந்த நிழற்படம்.


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!