தில்லையில் ஒரு நாள்

முனைவர் பட்ட ஆய்வை சமர்ப்பிக்கும் முன் தில்லைக்குச் சென்று அவரிடம் அனுமதியும் அருளாசியும் வாங்காமல் இருப்பது என் ஆய்வேட்டுக்குச் சிறப்பல்ல என்பதால், கடந்த மாதம் தில்லைத் திருக்கோயிலுக்கும் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கி இருந்த பர்ணசாலைக்கும், (அதாவது திருவாசகத்தை மணிவாசகர் சொல்லச் சொல்ல நடராசப் பெருமான் தம் கைப்பட உட்கார்ந்து எழுதிய - திருவாசகம் திருக்கோவையார் உருவான அந்த ஞான பர்ணசாலை), தில்லைக்காளி கோயிலுக்கும் சென்றிருந்த அனுபவம் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை... எல்லாம் எம்பெருமானின், அம்மையப்பரின் பெருங்கருணை என்றே கூறவேண்டும். அப்பெருங்கருணையே, அத் திருவருளே என்னை இப்பணியை செவ்வனே முடிக்கத் துணை நின்றுள்ளது என்பதையும் உணர்ந்துகொண்டேன்....

 எல்லாம் அவன் செயல்.... எல்லாம் சிவன் செயல் - என்பதுதான் சைவ சித்தாந்தத்தின் தாரக மந்திரம். அதை உணர்ந்தவர்கள்.... அவன்(சிவன்) நடத்தும் விளையாட்டில் தங்களையும் சேர்த்துக்கொள்ளச் சொல்வார்கள்.....அடியேன் சைவ சித்தாந்தம் என்று பயின்றேனோ அன்றே நானும் இந்த விளையாட்டில் சேர்ந்துவிட்டேன்....நீங்களும் வாருங்கள்.....இந்த விளையாட்டில் பரிசாக முத்தி எனும் ஞானம் கிடைக்கும்.... மறுபிறப்பு எனும் தோல்வி அழிந்தொழியும்....








மணிவாசகர் தங்கியிருந்த பர்ண சாலைக்குத்  தில்லை திருப்பெருந்துறை எனும் பெயர் வழங்குகிறது. திருப்பெருந்துறையில் இறைவன் காட்சி தந்து, தில்லையில் அவரை தம்மோடு இரண்டற இணைத்துக்கொள்கிறார். இச் சிறிய கோயிலில்தான் மணிவாசகர் குருமூர்த்தியாக சின்முத்திரை காட்டி அமர்ந்த நிலையிலும், இறைவன் (சிவலிங்கம் வடிவில்) அருகில் அமர்ந்து (மாணவனைப்போல்) பாடல்களைக் கேட்டு(திருவாசகம்) எழுதிக்கொள்ளும் கோலத்திலும் காட்டியளிக்கின்ற அந்த  அற்புதத்தைக் காணக் கண்கோடி வேண்டும்... பிறவிப் பிணியைத் தீர்க்க ஒருமுறையேனும் இங்கு கால்பதிக்க வேண்டும்....

(படங்கள் செல்லிடப்பேசியில் எடுத்ததால் தெளிவில்லாம் இருக்கிறது)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!