கோயில் காட்டிப் பட்டி- திருக்கோயில் திருப்பணி

நவம்பர், 7, 2022 வணக்கம்🙏 இரண்டு நாள்களுக்கு முன்பு செய்த பதிவில் (விராலிமலை,கொடும்பாளூர் அருகில்) "கோயில் காட்டிப் பட்டி". அதாவது முருகப்பெருமான்,விராலிமலை கோயில் எங்கே இருக்கிறது என்று திசை தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு வேடனாக வந்து, தான் வீற்றிருக்கும் விராலிமலை கோயிலைக் கை நீட்டிக் காட்டிய இடம் இந்த கோயில் காட்டி(டு)ப்பட்டி. அந்த இடத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தியையும் முருகப்பெருமான் வழங்கினார். ஆனால் அந்த இடம் இன்று சிதலமடைந்து கிடக்கிறது 😭 இந்த அற்புதத் தகவல் இன்று பலருக்கும் தெரியாது). 63 நாயன்மார்களில் அவரவர் பிறந்த ஊரில் கோயில் இல்லாத 30 பேருக்கு கோயில் எழுப்பி இருக்கிறார் சிவத்திரு ஐயா அ. சங்கர் அவர்கள் 🙏 அவர் இந்தக் கோயில் காட்டுப்பட்டி ஊரின் மகிமையை அறிந்து, கண்டுபிடித்து அந்தக் கோயிலை மீண்டும் புதுப்பிக்கும் பெரும் திருப்பணியில் இறங்கி இருக்கிறார். அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை மற்றும் (விருத்தாசலம்- திருமுதுகுன்றம்), காப்பர் டெம்பிள்- திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில் (தாமிர சபை) நிறுவனர் சிவத்திரு. அ.சங்கர் ஐயா அவர்களுடன் இணைந்து (திருக்)களம் இறங்கியிருக்கிறோம். அதற்கான பூமி பூஜைதான் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் பெரும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது🙏 திருக்கோயில் திருப்பணிக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவருக்கு ஒத்துழைப்பு நல்கி திருமுருகனின் அருளுக்குப் பாத்திரம் ஆவோம். அரிய பிறவியான இந்த மானுடப் பிறவியிலேயே நாமும் அட்டமா சித்தியைக் கைவரப் பெறுவோம். இறைவன் திருப்பணிக்கு நம்மை ஆளாக்கிக் கொள்வோம் 🙏 அதுவே பிறவியின் பெரும் பயன். "புதிது புதிதாகக் கோயிலைக் கட்டுவதைவிட பாழடைந்து கிடக்கும் கோயிலைப் புதுப்பிப்பதே பெரும் இறைப்பணி... அதுவே பிறவியின் பெரும் பயன்" என்கிற மகாப் பெரியவரின் திருவாக்குக்கு இணங்க .... செயல்படும் நேரம் வந்துவிட்டது... திருவருள் என்னையும் இதில் கூட்டி வைத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!