சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறை நிகழ்ச்சி

செப்டம்பர்-13 சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் நடந்த "இலக்கிய இன்பம்" மற்றும் "ஆசிரியர்" கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். (13.9.2022) மாணவ- மாணவியர் சிலப்பதிகாரத்தில் பெண், பாரதியார் காட்டும் பெண்கள், டாக்டர் அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள், கவிஞர் வாலியின் கவித்திறன், கங்கை மைந்தன் குகன், சிக்கனமும் சேமிப்பும், விளை நிலங்கள் விலை நிலங்கள் ஆவது ஏன் முதலிய சிறந்த தலைப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களே மிக அசத்தலாகப் பேசி அசத்தினார்கள்👍 உண்மையாகவே இலக்கிய இன்பத்தை நல்கியது இன்றைய நிகழ்ச்சி. இப்படி ஓர் அருமையான வாய்ப்பை எனக்கு வழங்கிய கல்லூரி முதல்வருக்கும், தமிழ்த்துறை தலைவர் ப. முருகன் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான அனைத்து பேராசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி🙏 ஒரு தாழ்மையான விண்ணப்பமும் வேண்டுகோளும் உண்டு.... இன்று தமிழ்ப் படிப்பவர்களே அதிலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களே அருகி வரும் நேரத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் ஆர்வமுள்ள தமிழ்த்துறை மற்றும் பிற துறை மாணவர்கள் பேசி அசத்தியது சிறப்பு. ஆனால் அவர்களில் பலருக்கும் "ழ" கர உச்சரிப்பு சரியாக வரவில்லை. தமிழ் மொழியின் சிகரமே... சிறப்பே... ழகரம்தானே. அந்த ழகர உச்சரிப்பை ஆசிரியர் பெருமக்கள் அவசியம் பயிற்சி கொடுத்து அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் 🙏

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!