சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடல்

சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடல் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு அந்த வகையில் ஆகஸ்ட் சுசு ஆம் நாள் சென்னப்பட்டணம் என்று அழைக்கப்பட்ட மெட்ராஸ் தற்போது சென்னை என்று அழைக்கப்படும் சென்னை மாகாணத்திற்கு இன்று வயது 383. இந்த நாளில் முனைவர் இடைமருதூர் கி மஞ்சுளா அவர்களின் நட்பு அழைப்பின் பேரில் வ.தேனாம்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ந்தது. ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி நிறுவனத்தின் செயலர் எழுத்தாளர் சூ.குழந்தைசாமி அவர்கள் எழுதிய குழந்தைகளுக்கு காந்தி நூல் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் இடைமருதூர் கி மஞ்சுளா அவர்கள் தற்கால சிறார் வாழ்வியலை தன் உரையில் பசுமரத்தானியாய் பதிய விட்டார் எனக்கு கிடைத்த சில நிமிடங்களில் குழந்தைகளோடு குறில் நெடில் விளையாட்டு, நன்றி கதை சொல்ல இயன்றது. சிறப்பு விருந்தினராக வந்து நூலேணி நூல்கொடை திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு நூல் கொடை அளித்தார். புகைப்படங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சியை சிறப்பாய் ஒருங்கிணைத்தார் ஆசிரியை தாமரைச் செல்வி அவர்கள். மாணவர்கள் மிக மகிழ்ச்சியாக கலந்துரையாடினர்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!